ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு!

0
418

தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் மியன்மாரின் முன்னாள் அரச தலைவி ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi 77 வயது) சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீடித்து இன்று மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi).

மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு! | Aung San Suu Kyi S Action Decision By The Court

ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது. கொரோனா விதிகளை மீறியமை, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியமை, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியன்மார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீடித்தது.

தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு! | Aung San Suu Kyi S Action Decision By The Court

இந்நிலையில், சூகி (Aung San Suu Kyi) மீதான வேறு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26 ஆக நீடித்துள்ளது.