இலங்கையில் மது பாவனையில் வீழ்ச்சியை பதிவு செய்த குடிமகன்கள்!

0
629

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் மது பாவனையில் குறிப்பிடத்தக்கவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

215 மில்லியன் லீற்றர் மதுபானம்

இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215 மில்லியன் லீற்றர் மதுபானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் உப தலைவர் நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை மக்கள் 120 மில்லியன் லீற்றர் மதுபானங்களை மட்டுமே விற்பனையாகியுள்ளதாக நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மது ஒழிப்பு தினம்

அடுத்த ஆண்டு சர்வதேச மது ஒழிப்பு தினத்தின் போது மது பாவனை கணிசமான அளவு குறைக்கப்படும் என அமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் வீழ்ச்சியை பதிவு செய்த குடிமகன்கள்! | Alcohols Fall In Sri Lanka
இலங்கையில் வீழ்ச்சியை பதிவு செய்த குடிமகன்கள்! | Alcohols Fall In Sri Lanka

கண்டியில் சர்வதேச மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.