விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!

0
321

விஜய்யின் வாரிசு 

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகிறது.

இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை இரண்டுமே விற்றுப்போய் உள்ள நிலையில், இதுவரை இப்படத்தின் தமிழக விநியோக வியாபாரம் மட்டும் விற்றுப்போகவில்லையாம்.

விநியோக வியாபாரம் 

ஏனென்றால், இப்படத்தின் தமிழக விநியோக வியாபாரத்தை மட்டுமே சுமார் ரூ. 80 கோடிக்கு விலை சொல்கிறாராம் தயாரிப்பாளர் தில் ராஜு.

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 82 கோடி ஷேர் செய்துள்ளது. இதனால் தான் அவர் வாரிசு திரைப்படத்திற்கு இந்த விலை கூறுகிறாராம்.

நடிகர் விஜய்யின் மார்க்கெட்டுக்கு ஆப்பு வைத்த திரைப்படம்.. வாரிசுக்கு ஏற்பட்ட சிக்கல் | Vijay Market Had Down Fall

ஆனால், விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரூ. 60 கோடி மட்டுமே ஷேர் செய்துள்ளது. இதனால் தான் வாரிசு திரைப்படத்தை ரூ. 80 கோடி கொடுத்து வாங்க யோசிக்கிறார்களாம்.