போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது அவ்வளவு நல்லதல்ல..

0
240

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்க அடிமையாவது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதால் எமது சமூகம் கேவலப்படுத்தப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.வரதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.

கடந்த வியாழக்கிழமை யாழ்.வைத்தீஸ்வரா கல்லுாரியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், எமது மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானா கூட்டம் தான் என கேவலப்படுத்தும் விதமாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் யாராவது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இது ஒரு பகுதியாக போய்க்கொண்டிருக்கட்டும் அதை விடுத்து 20 கிராமங்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதாகக் கூறுகிறார்கள் அதில் உண்மையும் இருக்கிறது.

போதைப் பொருள் பாவனை என்பது இன்று நேற்று கண்டுபிடித்த விடயம் அல்ல. ஊடகங்கள் பெரிதாக படம் காட்டுகின்றன.

அதே நேரம் போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது அவ்வளவு பெரிதாக நல்லதல்ல ஏனெனில் தொடர்ச்சியாக கருத்தரங்க வைப்பதால் போதை பொருள் தொடர்பில் மாணவர்கள் அறியக்கூடிய ஆவலை தூண்டும்.

அதனால் போதை பொருளினால் ஏற்படும் தீமைகளை மட்டும் பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.