யாழ்.வண்ணார்பண்ணையில் வன்முறை கும்பல் அட்டகாசம்!

0
98

யாழ்.வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்துள்ளனர்.

இளைஞர்கள் எச்சரிக்கை

இந்நிலையில் பிரதேச இளைஞர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனையடுத்து , நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்த ஆறு பேரைக் கொண்ட குழு அந்தப் பகுதியிலுள்ள நான்கு வீடுகள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பம் பிரதேச மக்கள் மத்தியில் ,அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் ; அச்சத்தில் மக்கள் | Violent Gangs Rampant In Jaffna