கல்லாவில் கை வைத்தவர் இரும்புக் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டார் !

0
89

பிலியந்தல படகத்தர பகுதியிலுள்ள கடையொன்றின் கல்லாவில் இருந்த பணத்தை திருட முயன்ற ஒருவர், மடக்கி பிடிக்கப்பட்டு, கடைக்கு முன்னால் உள்ள இரும்புக் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐஸ் கட்டி வாங்குபவர் போல் நேற்றையதினம் (29) கடைக்குச் சென்றுள்ள அவர், கடையின் உரிமையாளர் உள்ளே சென்ற சந்தர்ப்பத்தில் கல்லாவில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார்.

இரும்புக் கம்பத்தில் கட்டி வைத்த பிரதேசவாசிகள்

கடை உரிமையாளர் அதைப் பார்த்த போது, அங்கிருந்து தப்பிச் சென்ற குறித்த நபரைப் பிடித்த பிரதேச மக்கள் கடைக்கு முன்னால் இருந்த இரும்புக் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் இதற்கு முன்னர் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நபரை கைது செய்த கெஸ்பேவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லாவில் கை வைத்தவர் நையப்புடைப்பு | Robbery In Shop