ஐஸ் போதைப்பொருளுடன் வயோதிபப் பெண் கைது!

0
95

வயோதிபப் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பு 15, புளூமண்டல் வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருளுடன் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் மாதம்பிட்டிய வீதி, கிம்புல அல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான வயோதிப பெண்ணிடம் இருந்து 52 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை சந்தேகநபரான பெண் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான “கிம்புலா எலே குணா” என்பவரின் இந்நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சிறையில் இருக்கும் “ரத்னம் ரஞ்சித்” என்ற “கொரில்லா ரஞ்சி” என்பவரின் தாயார் என தெரியவந்துள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண்! | The Woman Caught By The Special Forces