உக்ரைன் போர் உலகப் போராக மாறுகின்றது!

0
211

உக்ரைன் போர் உலகப் போராக மாறுகின்றது என ரஷ்யாவின் பூகோள அரசியல் தத்துவாசிரியரும் ஜனாதிபதி புட்டினின் (Vladimir Putin) குரு என்று வர்ணிக்கப்படுபவருமாகிய அலெக்சாண்டர் டுகின் (Alexander Dugin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“போர் இரண்டு விளைவுகளை ஏற்படுத்தலாம். அதில் ஒன்று அணு ஆயுதப் பேரழிவு. ரஷ்யாவுக்கும் மேற்குக் கூட்டணிக்கும் இடையே இறுதி மோதல் நெருங்குகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பு தகவலை வெளியிட்ட புட்டினின் குரு! | Putin S Guru Who Released Sensational

ஐரோப்பிய – ஆசியா மையத்தில் ஒரு பேரரசாக ரஷ்யாவை விஸ்தரித்து விரிவுபடுத்துகின்ற கொள்கையின் தத்துவாசிரியர் என்று கருதப்படுபவர் டுகின். கடந்த மாதம் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு கார்க் குண்டுத் தாக்குதலில் அவரது மகள் பலியனார் என்பது குறிப்பிடத்தக்கது.

புட்டின் (Vladimir Putin) நாட்டைப் போருக்குத் தயார்ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட பின்னர் அதனை வரவேற்றுள்ள ரஷ்யாவின் தீவிர தேசியவாதிகளில் அலெக்சாண்டர் டுகின் முக்கியமானவர். உக்ரைன் போர் எவ்வாறு முடிவடையலாம் என்பது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் ரஷ்யா தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் அணு ஆயுதத்தின் ஆபத்தை மறந்து செயற்படுகின்ற நிலை ஏற்படும்.

ஓர் அணு ஆயுதப் பேரழிவுக்கு (“nuclear apocalypse”) அது வழிகோலும் – என்று எச்சரித்திருக்கிறார். மொஸ்கோ அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டுகின், உக்ரைன் மீதான புடினின் (Vladimir Putin) படையெடுப்பை நியாயப்படுத்தி மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாங்கள் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருக்கிறோம். எங்களை அங்கு தள்ளுவதில் வெறித்தனமாக இருப்பது மேற்குலகம்தான்.

போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா என்பது ஒரு திறந்த கேள்வி, ஆனால் அணுசக்திப் பேரழிவு ஒன்றுக்கான நிகழ்தகவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது என டுகின் (Alexander Dugin) குறிப்பிட்டுள்ளார்.