நாய் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு !

0
113

வாரியபொல கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்று விசர் நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி நாய் ஒன்று குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டில் வீட்டு நாயையும் கடித்துள்ளது.

இதனையடுத்து அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நாயால் 2 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு | 2 Year Old Child Tragically Killed By Dog

 தடுப்பூசி கிடைக்கவில்லை

எனினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர்நாய்க்கடிக்கான தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

நாயால் 2 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு | 2 Year Old Child Tragically Killed By Dog

குழந்தைக்கு ஒரு தடுப்பூசி செலுத்த வேண்டிய இருந்த நிலையில், இதற்கிடையில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு குழந்தை விசர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், குழந்தை கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தது.