அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்தில் சிக்கிய கனரக வாகனம் (Photos)

0
58

வெலிமடை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு உருளைக்கிழங்குகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கடவளை பகுதியில் வைத்து, குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியைவிட்டு விலகி  விபத்தில் சிக்கிய கனரக வாகனம் (Photos) | This Morning S Accident

சாரதியின் கவனயீனம்

இன்று காலை 6.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் உதவியாளர் படுங்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியைவிட்டு விலகி  விபத்தில் சிக்கிய கனரக வாகனம் (Photos) | This Morning S Accident

குறித்த லொறியில் இருந்த உருளைக்கிழங்கு வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலு ம் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.