இளவரசர் ஹரியின் யோசனைக்கு தேநீரை துப்பிய கமிலா!

0
267

முன்னாள் இளவரசரும் இந்நாள் மன்னருமான சார்லசுடனான (King Charles III) பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி (Prince Harry) சொன்ன யோசனையைக் கேட்டு குடித்துக் கொண்டிருந்த தேநீரை சார்லசின் மனைவியான கமீலா (Camilla) துப்பிவிட்டாராம்.

இளவரசர் ஹரியும் (Prince Harry) மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்குமான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டது.

ஹரியும் (Prince Harry) மேகனும் (Meghan) ஓபராவுக்கு அளித்த பேட்டி அந்தப் பிளவை மேலும் அதிகமாக்கியது.

இந்நிலையில், இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் இளவரசர் ஹரி (Prince Harry) தன் தந்தை சார்லசையும் கமீலாவையும் (Camilla) சந்தித்திருக்கிறார்.

இளவரசர் ஹரியின் யோசனைக்கு துப்பிய கமீலா! | Camilla Spit On Prince Harry S Idea

அதன்போது தனக்கும் தன் தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு மத்தியஸ்தரை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஹரி (Prince Harry) கூற கமீலா (Camilla) தான் குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம்.

உன்னுடய யோசனை ஆபத்தமானது என்று ஹரியின் (Prince Harry) முகத்துக்கு நேரே கூறிய கமீலா (Camilla) நாமெல்லாரும் ஒரு குடும்பம் குடும்பப் பிரச்சினைகளை குடும்பத்தினர்தான் தீர்த்துவைக்கவேண்டும் என்றாராம்.

இந்த தகவலை, ராஜகுடும்ப நண்பர் ஒருவர் ராஜகுடும்ப நிபுணரான கேட்டி நிக்கோல் (Katie Nicholl) என்பவரிடம் தெரிவித்துள்ளனர்.