புடினின் அறிவிப்பால் நாட்டை விட்டு வெளியேறும் ரஷ்ய ஆண்கள்!

0
465

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஒரு பகுதி அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டதை அடுத்து சில ரஷ்ய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற விரைந்துள்ளனர்.

குறித்த ஆண்கள் பின்லாந்து மற்றும் ஜோர்ஜியாவுடனான எல்லைக் கடக்கும் போக்குவரத்து மற்றும் மொஸ்கோ விமான டிக்கெட்டுகளுக்கான விலைகள் உச்சக்கட்ட அளவு அதிகரித்துள்ளன.

புடினின் அறிவிப்பால் நாட்டைவிட்டு வெளியேறும் ஆண்கள்! | Men Leaving The Country Due To Putin

ஜனாதிபதி புட்டின் (Vladimir Putin) புதன்கிழமை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவின் முதல் அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் உக்ரைனின் பகுதிகளை இணைக்கும் திட்டத்தை ஆதரித்தார். ரஷ்யாவைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறியதுடன் மேற்கு நாடுகளை எச்சரித்தார்.

மொஸ்கோவிலிருந்து பயணிக்கும் விமான டிக்கெட்டுகளுக்கான விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதுடன் வெளிநாட்டு இடங்களுக்கு செல்லும் ஒரு வழி டிக்கெட்டுகளுக்கு 5,000 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலான விமான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதென தெரியவந்துள்ளது.