ஐ.நாவில் உரையாற்றிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா!

0
490

உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) பேசினார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றினார்.

உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து தற்போது மெள்ள மெள்ள மீண்டு வருகிறது.

மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம், வறுமை, பசிப்பட்டினி, சமத்துவமின்மை, போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக நாடுகள் நீண்ட நாட்களாக போராடி வருகிறது.

இந்த நெருக்கடிகள் ஏதோ சந்தர்பங்களால் உருவானவையல்ல. ஆனால் இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிகவும் முக்கியம் என அவர் கூறினார்.

உலக அமைதிக்காக போராடி நோபல் பரிசு பெற்ற மலாலாவை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.