பணம் அனுப்பாத மனைவி; ஆத்திரத்தில் இரண்டு சிறுமிகளை கொடூரமாக தாக்கிய தந்தை!

0
242

மது போதையில் தனது இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக தாக்கும் தந்தையின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கோதாவரியில் தாடே பள்ளிகுடம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவருடைய மனைவி குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார்.

பணம் அனுப்புவதை நிறுத்திய மனைவி

இந்நிலையில் தான் சம்பாத்தித்த பணத்தை தனது கணவருக்கு அனுப்பி வந்துள்ளார். எனினும் கணவர் தான் அனுப்பும் பணத்தை மது வாங்க பயன்படுத்துவதை அறிந்த மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தனது இரண்டு பெண் குழந்தைகளையும் துன்புறுத்தி வந்துள்ளார்.

குடிபோதையில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தாறுமாறாக தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிசார் தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.