யாழில் கடந்த மூன்று மாதத்தில் போதை பொருள் பாவனையினால் 10 பேர் உயிரிழப்பு!

0
165

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில் போதை பொருள் பாவனையினால் 10 பேர் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மாணவர்களிடத்திலும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

ஆகவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர் மற்றும் சிவில் சமூகத்தினர் முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்

.