டி20 போட்டியில் வனிந்து ஹசரங்க தலைவலியாக இருப்பார் – முத்தையா முரளிதரன்

0
167

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா முரளிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்தியாவில் இடம்பெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் இணைந்து கொண்டதுடன் போட்டிக்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

வனிந்து ஹசரங்க தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வெளியிட்ட தகவல்! | Comment For Muralitharan Regarding Hasaranga
wanindu hasaranga

இருப்பினும், அவரது பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமலும் இல்லை என முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும் எனவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வெளியிட்ட தகவல்! | Comment For Muralitharan Regarding Hasaranga