பிரித்தானிய ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்!

0
417

பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் (David Beckham) 12 மணிநேரம் வரிசையில் காத்திருந்து பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரித்தானிய நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த 8ம் திகதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

அவரது மறைவு பிரித்தானிய மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராணியின் உடல் அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது.

பிரித்தானிய ராணிக்கு அஞ்சலி செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்! | Football Player Wait Line Long Time Tribute Queen

அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.

பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அந்த வகையில் பிரித்தானிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும் ரசிகர்களின் ஆதர்ச நாயகனுமான டேவிட் பெக்காம் பொது மக்களுடன் 12 மணிநேரம் வரிசையில் காத்திருந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரித்தானிய ராணிக்கு அஞ்சலி செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்! | Football Player Wait Line Long Time Tribute Queen

ராணிக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய டேவிட் பெக்காம் “இந்த நாள் எப்போதுமே கடினமாக இருக்கும். அது தேசத்திற்கும் கடினமான நாள்.

உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் இது கடினமான ஒன்று. எல்லோரும் அதை உணர்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மேலும் எங்கள் எண்ணங்கள் ராணியின் குடும்பம் மற்றும் இன்று இங்குள்ள அனைவருடனும் உள்ளன” என்றார்.

பெக்காமுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் கூறுகையில்,

இன்று பெக்காமுடன் வரிசையில் நேரத்தைச் செலவிட்ட பிறகு அவர் மீது “பெரிய மரியாதை” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 19-ம் திகதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவுக்கு வரும்.

பிரித்தானிய ராணிக்கு அஞ்சலி செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்! | Football Player Wait Line Long Time Tribute Queen