இராஜாங்க அமைச்சர்களை நியமித்து பயனில்லை – ஜி.எல்.பீரிஸ்

0
339

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்துவது, IMF யிடம் இருந்து கிடைக்கும் உதவிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் உள்ள தடைகளை போக்குவதில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை எனவும் கூறினார்.

அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை... கடும் எதிர்ப்பை வெளியிட்ட  ஜீ.எல்.பீரிஸ்! | Number Of State Ministers Rise G L Peiris Defiance

மேலும், இராணுவத்தினரைப் போல எண்ணிக்கைக் கொண்ட இராஜாங்க அமைச்சர்களை கொண்ட அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்புகளிடமிருந்து ஒருபோதும் உதவிகள் கிடைக்காது என்றார்.

இதேவேளை, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க நிதி இல்லாத இந்நேரத்தில், இராஜாங்க அமைச்சர்களை நியமித்திருப்பது பிரயோசனமற்றது எனவும் கூறினார்.