நாமலை அமைச்சராக்க பிரசன்ன ரணதுங்க முயற்சி!

0
472

அமைச்சு பதவி பெறுவதற்கு நாமல் ராஜபக்ச தகுதியானவர். எனவே அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் பதவிக்கு நாமல் ராஜபக்சவும் தகுதியானவர் என நினைக்கிறேன். ஆனால் அவர் அமைச்சர் பதவி எடுப்பாரா இல்லையா என்பது தெரியாது எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் 

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால் அவர் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதுபோல முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்த பிரசன்ன ரணதுங்க அவருடைய செயல்கள் சரியா தவறா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நாமலை அமைச்சராக்க துடிக்கும் பிரசன்ன ரணதுங்க! | Ranatunga Is Trying To Make Namala Minister