உணவு விடுதியில் திருமணத்தை நடத்திய கனேடிய தம்பதி!

0
779
Couple hands on wedding, symbolize forever togetherness and marriage.

கனேடிய தம்பதியினர் தங்களது திருமண நிகழ்வினை நூதனமான முறையில் நடாத்தி அசத்தியுள்ளனர். பொதுவாகவே ஆலங்களிலும் மண்டபங்களிலுமே திருமண நிகழ்வுகள் நடாத்தப்படும்.

எனினும் இந்த தம்பதியினர் நூதனமாக ஓர் உணவு விடுதியில் தங்களது திருமண நிகழ்வினை நடாத்தியுள்ளனர்.

றொரன்டோவின் பிரபல்யமான ஷாப்பிங் மால்களில் ஒன்றான டுப்ரீன் மாலில் (Dufferin Mall) உணவு விற்பனை நிலையமான சின்னாபோனில் (Cinnabon) தங்களது திருமண நிகழ்வினை நடாத்தியுள்ளனர்.

எந்தவொரு விடயத்தையும் பாரதூரமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதனை வெளிப்படுத்தும் வகையில் இந்த இடத்தை தெரிவு செய்ததாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

திருமணம் நடாத்துவதற்கான இடத்திற்கு வெறும் ஐந்து டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

திருமண நிகழ்விற்கு ஷொப்பிங் மாலுக்கு வந்திருந்தவர்கள் அழையா விருந்தினராக வந்திருந்தனர் என்பதுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த உணவுக் கடையை கடக்கும் போது தங்களது திருமண நிகழ்வு நினைவுக்கு வரும் என இருவரும் தெரிவித்துள்ளனர். 

கேட் பாலும்போ மற்றும் அன்டி லாரோக்கா ஆகியோரே இவ்வாறு ஷொப்பிங் மாலில் தங்களது திருமண வைபவத்தை நூதனமாக நடாத்தியுள்ளனர்.