அயர்லாந்து நாட்டில் இன்ஸ்டாகிராமிற்கு 405 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. குழந்தைகளின் தனியுரிமையை மீறியதற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்து குடியரசின் ஐரோப்பிய தலைமையகம் மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட மூன்றாவது அபராதம் இதுவாகும்.
எனினும், இன்ஸ்டாகிராம் மெட்டா இந்த தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.