இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் குடியிருப்பு திறப்பு!

0
487

தமிழகம் திண்டுக்கல்லில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை மாதிரியாகக் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சிப் பகுதியில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 17.17 கோடி இந்திய ரூபா செலவில் 321 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் குடியிருப்பு திறப்பு | Opening Residence In Tamil Nadu For Lankan Tamil

இந்நிலையில் கட்டுமானப் பணிகளை தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கண்காணித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் குடியிருப்பு திறப்பு | Opening Residence In Tamil Nadu For Lankan Tamil

இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் திண்டுக்கலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 321 வீடுகளை மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தக் குடியிருப்புகளை இலங்கைத் தமிழர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.