சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை இசைக்கலைஞர்: இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

0
371

கொரோனா காலகட்டம் கலைஞர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்த நிலையில் உள்ளூர் கலைஞர்கள் தற்போது வெளிநாடுகளில் மீண்டும் பிஸியாகத் துவங்கியுள்ளார்கள். 

இலங்கை ரசிகர்களால் Suzie Croner என்று அழைக்கப்படும் Suzi Fluckiger இப்போது தான் வாழும் சுவிட்சர்லாந்தில் மீண்டும் பரபரப்பாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கியுள்ளார்.

Suziக்கு நிகழ்ச்சிகள் நடத்த பல வாய்ப்புகள் வந்தாலும் தான் சுவிட்சர்லாந்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை விரும்புவதாக தெரிவிக்கிறார்.

சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை இசைக்கலைஞர்: இலங்கை வருகை ஒத்திவைப்பு | A Sri Lankan Musician Living In Switzerland

சொல்லப்போனால், Suziயின் பெயர் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றிலும் வந்துவிட்டது.

இந்த ஆண்டின் இறுதி வாக்கில் இலங்கையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தார் Suzi. ஆனால் இப்போது இலங்கையில் காணப்படும் சூழல் காரணமாக அதைக் கொஞ்சம் ஒத்திவைத்திருக்கிறார்.

Suziயின் கணவரான Thomas William Fluckiger நுரையீரல் புற்றுநோயால் சமீபத்தில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது.