3 நாட்களில் 36000 கிமீ காரில் பயணித்த டொராண்டோ பெண்

0
512

மூன்று நாட்களில் சுமார் 36000 கிலோ மீற்றர் காரில் பயணிதத்தாக றொரன்டோவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நிறுவனமொன்று வாடகைக் கட்டணம் அறவீடு செய்துள்ளது.

றொரன்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர் வாடகைக்கு வாகனம் வழங்கும் நிறுவனமொன்றிடமிருந்து கார் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளார்.

மூன்று நாட்களின் பின்னர் காரை ஒப்படைத்த போது நிறுவனம் குறித்த பெண்ணிடம் 8000 டொலர்களை செலுத்துமாறு கோரியுள்ளது.

வான்கூவாரைச் சேர்ந்த கொயோவானா பொனிபேஸ் என்ற பெண்ணே இந்த சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்.

தனது மகள் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பது குறித்த பணிகளுக்காக இந்தப் பெண் வாகனத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த மூன்று நாட்களிலும் தாம் சுமார் 300 கிலோ மீற்றர் பயணித்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

முற்பணமாக 1000 டொலர்களை செலுத்தி விட்டு காரை மீள ஒப்படைத்து விட்டு ஐரோப்பா செல்வதற்காக விமான நிலையம் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் வைத்து இணைய வழியில் கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களை பார்த்த போது குறித்த வாடகை கார் நிறுவனம் 8000 டொலர்களை அறவீடு செய்துள்ளமையை கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் 36482 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளதாகவும் அதற்காக ஒரு கிலோ மீற்றருக்கு 25 சதம் என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

72 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக மணிக்கு 500 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்திருந்தால் மட்டுமே இந்த தூரத்தை கடந்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

றொரன்டோவிலிருந்து தென் ஆபிரிக்காவிற்கு மூன்று தடவைகள் பயணம் செய்யும் தூரத்தை பயணித்துள்ளதாக இந்த நிறுவனம் கட்டணம் அறவீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விமான பயணத்தை தொடர வேண்டும் என்பதனால் இந்த விடயம் குறித்து தொலைபேசியில் முறையீடு செய்த போதிலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஊடகங்களில் சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பணத்தை மீள அளிப்பதாக நிறுவனம் ஒப்புக் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தவறுகள் இடம்பெறலாம் என்பதனை தாம் ஒப்புக் கொள்தாகவும் எனினும் நிறுவனம் உரிய முறையில் பதிலளிக்காமையே தம்மை ஆத்திரமடையச் செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.