ஜனாதிபதி ரணில் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்!

0
362

போராட்டத்தில் பங்களித்த இலட்சக்கணக்கான மக்கள் சமூக அமைப்பில் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அதனை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்து  

“அடக்குமுறை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி பலர் விரல் நீட்ட முயற்சிக்கின்றனர். ஜனநாயகத்திற்கு எதிரானது என்றால் அடக்குமுறை என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த போராட்ட களத்தில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் விருப்பம் கொள்ளையடிக்கப்படக் கூடாது. அவற்றை எரித்து நாசமாக்கக் கூடாது. அவர்களின் விருப்பம் ஆட்சி மாற்றம், முறைமை, சமூக மாற்றம். அந்த மாற்றத்தை ரணில் விக்கிரமசிங்க அவர்களால் செய்ய முடியும் என்பதை என்னால் கூற முடியும்.

ஜனாதிபதி ரணில் தொடர்பில் பகீர் கருத்துக்களை வெளியிட்ட எம்.பி! | Vajira Abe Vardhanas Bagheer Comments About Ranil

ஊடகமாகிய நீங்கள் உலகத் தலைவர்களின் பட்டியலுக்குச் சென்று ஆய்வு செய்வது நல்லது. உலகத் தலைவர்களின் பட்டியலில் உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரால் இலங்கை ஆளப்படுகிறது. இதனை சகிக்க முடியாதவர்களும் இருக்கலாம். அதற்கும் சம்பந்தமே இல்லை. அதைப் பாதுகாப்பது இலங்கைப் பிரஜைகளின் கடமை. அதற்காக காத்திருக்க முடியாத ஒரு சர்வதேச சமூகம் உலகில் உள்ளது. உலகத் தலைவர்கள் பட்டியலில் தனித்தனியாகச் சென்று நாடுகளுக்கு ஏற்ப தேடுதல் செய்யலாம். இன்று உலகின் சக்தி வாய்ந்த தலைவர் இலங்கையில் இருக்கிறார். அப்படியானால் அந்தத் தலைவரை இலங்கையின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். வீழ்ந்த நாட்டை அவர் உயர்த்துவார் என்பதில் ஐயமில்லை”

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.