ஏலத்திற்கு வந்த எலோன் மஸ்க்கின் புகைப்படங்கள்!

0
368

உலகின் செல்வந்தரும் டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலோன் மஸ்கின் (Elon Musk) இளமைக்கால புகைப்படங்களை அவரது முன்னாள் காதலி ஒன்லைன் மூலம் ஏலம் விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் இருந்து கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த எலோன் மஸ்க் (Elon Musk) அங்கு பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

ஏலத்திற்கு வந்த எலன் மஸ்க்கின் புகைப்படங்கள்! | Photos Of Elon Musk That Came To Auction

பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது ஜெனிஃபர் க்வின் என்ற பெண்ணுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார். 1994ஆம் ஆண்டு இருவரும் 20 வயதின் ஆரம்பித்திலிருந்த போது காதல் வயப்பட்டுள்ளனர்.

இருவரும் ஒரு வருடமாக காதலித்த பின்னர் பிரிந்துள்ளனர். இந்நிலையில் எலோன் மஸ்கின் (Elon Musk) இளமைக்கால புகைப்படங்களை அவரது முன்னாள் காதலி ஒன்லைன் மூலம் ஏலம் விட்டுள்ளார்.

ஏலத்திற்கு வந்த எலன் மஸ்க்கின் புகைப்படங்கள்! | Photos Of Elon Musk That Came To Auction

யாருமே பார்த்திராத எலோன் மஸ்கின் (Elon Musk) இளம் பருவ புகைப்படங்கள் மற்றும் ஜெனிஃபர் உடன் அவர் இருக்கும் புகைப்படங்களை RR அக்ஷன் மூலம் ஏலம் விட்டுள்ளார்.

ஜெனிஃபர் க்வின் தனது வளர்ப்பு மகனின் கல்லூரிப் படிப்புக்கு பணம் திரட்டுவதற்காக இருவரும் உறவில் இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஏலம் விட முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார். RR ஆக்‌ஷனில் எலோன் மஸ்கின் 18 புகைப்படங்கள் ஏலத்திற்காக விடப்பட்டுள்ளன.

ஏலத்திற்கு வந்த எலன் மஸ்க்கின் புகைப்படங்கள்! | Photos Of Elon Musk That Came To Auction

அதில் சில புகைப்படங்களில் எலோன் மஸ்க்கு (Elon Musk) ஜெனிபர் மற்றும் அவரது நண்பர்களுடன் எடுத்துக் கொண்டவை ஆகும். தகவல்களின் படி,ஒவ்வொரு படமும் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டொலர்கள் வரை ஏலத்திற்கு செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏலத்திற்கு வந்த எலன் மஸ்க்கின் புகைப்படங்கள்! | Photos Of Elon Musk That Came To Auction

எலோன் மஸ்க் (Elon Musk) கையொப்பமிட்ட பிறந்தநாள் அட்டையும் ஏலத்தில் உள்ளது, அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெனிஃபர் லவ், எலோன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதன் விலை தோராயமாக 1,331 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக, ஸ்பேஸ் எக்ஸ் அதிபரால் கையொப்பமிடப்பட்ட ஒரு டொலர் பில் மற்றும் பரிசளிக்கப்பட்ட 14 கே தங்க நெக்லஸ் முறையே 2,200 அமெரிக்க டொலர்கள் வரை விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது.

டெய்லி மெயிலுக்கு க்வின் அளித்துள்ள பேட்டியில், “எங்களுடைய ஒரு வருட கால உறவு இனிமையானது. ஆனால் அன்பானது இல்லை. அவரது கூச்ச சுபாவமே என்னை மிகவும் கவர்ந்தது. அவர் என்னை விட மூத்தவர். ஒரே தங்குமிடத்தில் வசித்தோம். நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம்” என தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில், மஸ்க் எலக்ட்ரானிக் கார்களின் கென்செப்ட் மீது தீவிர கவனம் செலுத்தி வந்ததாகவும் அவ்வப்போது அதைப் பற்றி பேசி வந்ததாகவும் க்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் எலோன் மஸ்க் (Elon Musk) படிப்பின் மீது தீவிர ஆர்வமாக இருப்பார் என்றும் எலக்ட்ரிக் கார்கள் பற்றி பேசிக்கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் (Elon Musk) உடனான நினைவு பரிசுகளை பொக்கிஷமாக பாதுகாத்த வந்த க்வின் நீண்ட யோசனைக்குப் பிறகே அதனை விற்க முடிவெடுத்துள்ளார். அனைத்து பொருட்களின் ஏலம் செப்டெம்பர் 14 அன்று முடிவடைகிறது.