சுதந்திர தினத்தன்று ரஷ்யா உக்ரைனை தாக்கக்கூடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

0
496

இன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கெடுக்க புடின் ஏதோ மோசமான ஒன்றை செய்யக்கூடும் என எச்சரித்துள்ளார் ஜெலன்ஸ்கி.

இன்று (24. 8.2022) உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் அதைக் கெடுப்பதற்காக ரஷ்யா மோசமாக எதையோ செய்யலாம் என தான் கவலைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால் உக்ரைனுக்கு எப்படி இன்று சுதந்திர தினமோ அதேபோல இன்றைய தினம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் ஆறாவது நினைவுநாளும் கூட என்பதால் ரஷ்யா உக்ரைன் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

ஆகவே, ஏவுகணைத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் தலைநகர் கீவ்வை விட்டு அவசரமாக வெளியேறி வருகிறார்கள்.

உக்ரைன் சுதந்திர தினத்தையொட்டி ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | Zelensky Warns On Ukraine S Independence Day

அதேநேரத்தில், அப்படி ரஷ்யா உக்ரைன் மீது இன்று தாக்குதல் நடத்தினால் அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

புடினுக்கு நெருக்கமான நபர் ஒருவருடைய மகள் கொல்லப்பட்டதற்கு உக்ரைன்தான் காரணம் என ரஷ்யா கூறியிருக்கும் நிலையில் உக்ரைன் அரசு அலுவலகங்கள் மீது ரஷ்யா வரும் நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என நேற்று அமெரிக்கா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.