மீண்டும் உருவாகும் இந்தியன் 2!

0
321

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

அதற்கு பிறகு ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையேயான வழக்கு விவகாரம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படாமல் இதுவரை தள்ளி போய் கொண்டிருக்கிறது.

தற்போது பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதால் இந்தியன் 2 படபிடிப்பு மீண்டும் துவங்க படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இன்று இரவு 12 மணியளவில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சமூக வலைதளங்களில் இந்தியன் 2 படத்தின் படபிடிப்பை மீண்டும் துவங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன், மற்றும் இயக்குனர் ஷங்கர் இதனை உறுதிசெய்துள்ளனர்.