QR அமைப்பு மூலம் எரிபொருள் விநியோகத்தால் எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்துள்ளது

0
580

நாட்டில் QR முறைமை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை மக்களுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையிலான எரிபொருள் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதால் தேசிய சேமிப்பிற்கும் வழிவகுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் இதுவரை 6 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டுக்கு  மசகு எண்ணெய் கப்பல் விரைவில் வருகை

நாடளாவிய ரீதியில் உள்ள 93% எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த வேலைத்திட்டம் செயற்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதிக்கான   செலவு குறைந்துள்ளது! | The Cost Of Import Has Decreased

இதேவேளை, 20,000 மெட்ரிக் தொன் எடை கொண்ட மசகு எண்ணெய் கப்பல் விரைவில் நாட்டுக்கு வரவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 40 நாட்களில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அதன் அதிகபட்ச கொள்ளளவைக் கொண்டு இயங்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.