இலங்கை கிரிக்கெட் அணியில் கற்கும் யாழ் இளைஞனுக்கு வாய்ப்பு!

0
194

இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கொழும்பு, கல்கிசை சென் தோமஸ் கல்லூரியின் உப தலைவராக சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஸ்ரன் அண்மையில் மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞனுக்கு அறிய வாய்ப்பு! குவியும் வாழ்த்துக்கள் | Chance For The Jaffa Youth Sri Lankan Cricket Team

கனிஸ்ரன் குணரட்ணம் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களான Dr.ஹன்றி றோச் குணரட்ணம் மற்றும் Dr. சினோதயா குணரட்ணம் ஆகியோரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, யாழ்ப்பாணக் கல்லூரியுடன் தொடர்புகளை கொண்டிருந்த ரஸல் ஆர்ணல்ட் 1997 – 2007 ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை அணியின் சகலதுறை வீரராக பெருமை சேர்ந்திருந்த நிலையில் தற்போது கனிஸ்ரன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.