ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகாவிட்டால்… மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை!

0
466

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை ஏமாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவில்லையெனில் .... விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! | Unless The President And Prime Minister Resign

கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை விட இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என அதன் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாத நிலையில் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தொடர்பில் காலிமுகத்திடல் பிரதிநிதிகள் மத்தியில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.