உக்ரைன் மக்களை ரஷ்ய குடிமக்களாக்கினார் புடின்!

0
316

உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷ்யா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) நேற்று கையெழுத்திட்டார்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ரஷ்ய குடியுரிமையை எளிதில் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

உக்ரைன் மக்களை ரஷ்ய குடிகளாக்கிய அதிபர் புடின்! | President Putin People Of Ukraine Russian Citizens

இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் அதிபர் புடின் (Vladimir Putin) கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.