பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்த போப்!

0
531
FILE -- Pope Francis attends his weekly general audience in St. Peter's Square at the Vatican, Wednesday, Jan. 22, 2014. The Vatican’s sprawling financial trial may not have produced any convictions yet or any new smoking guns. But recent testimony in May 2022 has provided plenty of insights into how the Vatican operates. (AP Photo/Alessandra Tarantino, File)

சமீபகாலமாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் (Pope Francis) மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 85 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக கோடை காலத்தின் இறுதியில் அவர் பதவி விலகும் முடிவை அறிவிக்கலாம் என செய்திகள் வலம் வருகின்றன.

பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்த போப் ஆண்டவர்! | Pope Francis Denied The Decision To Resign

இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “கோடை இறுதியில் பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் எனது மனதில் நுழையவே இல்லை” என்றார்.

பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்த போப் ஆண்டவர்! | Pope Francis Denied The Decision To Resign

மேலும் அவர் இந்த பேட்டியின் போது,

இந்த மாதம் 24-ம் திகதி முதல் 30-ம் திகதி வரை கனடாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த பயணத்தின்போது போர் நடந்து வரும் உக்ரைனுக்கு செல்வேன் என தான் நம்புவதாகவும் கூறினார்.