ரஷ்யாவின் புகழ் பாடுவதை நிறுத்துங்கள்; சீறிய அமெரிக்க தூதுவர்!

0
599

உக்ரைன் போருக்கு மத்தியில் சீனா ரஷ்ய பிரசாரத்தை பரப்பக்கூடாது என அமெரிக்க தூதுவர் நிக்கோலஸ் பர்ன்ஸ் (Nicholas Burns) தெரிவித்தார்.

இன்று சீனாவில் நடைபெற்ற உலக அமைதி மன்றத்தில் பேசிய அமெரிக்க தூதுவர் நிக்கோலஸ் பர்ன்ஸ் (Nicholas Burns), சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்கள் ரஷ்ய பிரச்சாரத்தை மீண்டும் செய்வதையும், போருக்கு நேட்டோவை குற்றம் சாட்டுவதையும் நிறுத்துவார்கள் என நம்புவதாக கூறினார்.

உக்ரைனில் இல்லாத அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் பற்றி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்கள் பொய் சொல்வதை நிறுத்துவார்கள் என்றும் என தாம் நம்பவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ், பிரெஞ்சு, ரஷ்ய தூதர்கள் மற்றும் சீன அரசாங்க ஆலோசகர் ஆகியோருடன் இணைந்த பர்ன்ஸ் (Nicholas Burns), உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் உலகளாவிய உலக ஒழுங்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறினார்.

ரஷ்யாவின் புகழ் பாடுவதை நிறுத்துங்கள்; சீறிய அமெரிக்க தூதுவர்! | Stop Singing The Praises Of Russia Us Ambassador

மேலும் இந்த அமர்வின் போது, மூன்று மேற்கத்திய தூதர்களும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என ரஷ்யாவை விமர்சித்த நிலையில் அந்த கருத்துக்களை ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் நிராகரித்திருந்தார்.