இலங்கையின் நெருக்கடி! ஆசிய நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை

0
735

இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை என முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

மேலும், நாணயத்தை மோசமாக நிர்வகித்ததும் மோசமான முதலீட்டுக்கொள்கையுமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலை! ஆசிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை | Status Of Sri Lanka A Warning To Asian Countries

இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கான ஒரு எச்சரிக்கை. ஆசிய நாடுகள் பொறுப்புணர்வுள்ள நிதிக்கொள்கையை பின்பற்றவேண்டும் அல்லது மன்னிக்காத சர்வதேச நாணயநிதியத்தின் கரங்களில் சிக்கவேண்டியிருக்கும்.

கடன் வழங்கியவர்களிற்கு செலுத்துவதற்கான வலுவான நாணய இருப்பு இலங்கையிடம் இல்லாததே அதன் பிரச்சினை நாணயத்தை மோசமாக நிர்வகித்ததும் மோசமான முதலீட்டுக்கொள்கையுமே இதற்கு காரணம்.

அனைவரும் இலங்கையின் பாதையில் செல்வதற்கான சாத்தியக்கூறுகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நிலை! ஆசிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை | Status Of Sri Lanka A Warning To Asian Countries

இது அனைவருக்கும் ஒரு பாடம். சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கியிடம் நீங்கள் சென்றீர்கள் என்றால் அவர்கள் நீங்கள் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தும் விடயத்தில் மாத்திரம் அக்கறை செலுத்துவார்கள்.

குறிப்பிட்ட நாட்டிற்கு பொருளாதார ரீதியில் அல்லது சமூக ரீதியில் என்ன நடக்கின்றது என்பது குறித்து அவர்களிற்கு கவலையில்லை.

அவர்கள் நாட்டையும் அதன் பொருளாதார கொள்கையையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிப்பார்கள் அதாவது நாங்கள் அவர்களிடம் சரணடையவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.