ஈழத் தமிழர் விடுதலை: தமிழக அரசுக்கு சீமான் நன்றி!

0
240

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 ஈழத்தமிழர்களை விடுவித்ததற்கு தமிழக அரசுக்கு தமிழக அரசியல்வாதியும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ந்தேன்.

நீண்ட நெடு நாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப் போராட்டத்திற்கும் கருத்துப் பரப்புரைக்கும் பிறகு ஆறுதலாகக் கிடைக்கப் பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன்.

ஈழத் தமிழர்கள் விடுதலை: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சீமான்! | Eelam Tamils Released Seeman Thanked The Tn Govt

இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல, இந்தியச் சட்டத்தின்படி தங்களை அகதிகள் என பதிவு செய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.