உலகப் பணக்காரர்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில் அதானி மற்றும் அம்பானியின் சொத்து அதிகரிப்பு

0
245

உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ள நிலையில் இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பு தலா 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவடைந்தது.

அதே நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 22.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதுடன் அவரின் மொத்த சொத்து மதிப்பு 7 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

இத போல ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து 23 ஆயிரத்து 685 கோடி ரூபாய் அதிகரித்து 7 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

மார்க் ஸக்கர்பெர்க்

ஜெஃப் பிசோஸ்