உலக நாயகனுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்

0
408

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.  

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா, மீனா, காஜல் அகர்வால், விஜய் சேதுபதி, பார்த்திபன், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், பிரணிதா உள்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்! | Uae Honored Indian Actor Kamal Haasan Gold Visa

தற்போது துபாயில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.

மேலும் இந்திய பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஐக்கிய அரபு அமீரக நிர்வாகம் முதன்முதலாக நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுக்கத்தான் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’

ஆனால் கொரோனா தொற்று பரவல், பிற அரசியல் மற்றும் தொழில்முறை காரணங்களால் அப்போது இந்த விசாவை நடிகர் கமல்ஹாசன் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.  

உலக நாயகன் கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்! | Uae Honored Indian Actor Kamal Haasan Gold Visa