91 வயதில் 4வது மனைவியை விவாகரத்து செய்யும் அமெரிக்க தொழிலதிபர்!

0
187

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்-ல் (Jeff Bezos) துவங்கி மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் (Bill Gates) வரையில் பல முன்னணி தொழிலதிபர்களின் விவாகரத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் பில்லியனர் விவாகரத்துச் செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக 4வது முறையாக இந்தப் பணக்காரர் விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பில்லியனரான ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch)தனது 91 வயதில் 4வது மனைவியான 65 வயதுடைய முன்னாள் சூப்பர் மாடலான ஜெர்ரி ஹால்-ஐ விவாகரத்துச் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 17.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் ரூபர்ட் முர்டாக் அமெரிக்கா மட்டும் அல்லாமல் தனது கிளை மற்றும் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக உலகம் முழுக்க இருக்கும் மீடியா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

3 மனைவிகள் ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch) முதல் மனைவி விமானப் பெண் இவருடைய பெயர் பாட்ரிசியா புக்கர் (Patricia Booker) இவரை 1966ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார்.

91 வயதில் 4வது மனைவியை விவாகரத்துச் செய்யும் பிரபல தொழிலதிபர்!
Patricia Booker

இரண்டாவது மனைவி அன்னா முர்டோக் மான் (Anna Murdoch Mann) இவர் ஸ்காட்லாந்து பத்திரிகையாளர் இவரை 1999ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார். 3வது மனைவி தொழிலதிபரான வெண்டி டெங் (Wendy Deng) 14 வருட திருமணத்திற்குப் பின்பு 2014ல் விவாகரத்துச் செய்தார்.

anna murdoch mann
wendi deng

இந்நிலையில் 4வது மனைவியான 65 வயதான முன்னாள் சூப்பர் மாடலான ஜெர்ரி ஹால் (Jerry Hall)ஐ 6 வருட திருமணத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய உள்ளார். இதன்போது 91 வயதாகும் ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch) 5வது முறை திருமணம் செய்துகொள்வாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.