இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!

0
540

இலங்கையில் அண்மைக்காலமாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: அரசு எடுத்த அதிரடி முடிவு

இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை நாளை (20-06-2022) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: அரசு எடுத்த அதிரடி முடிவு

அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.