திறந்த கணக்கு முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதிக்கு அனுமதி

0
412

நாட்டில் திறந்த கணக்கு முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

nalin fernando

இந்த திட்டத்தின் கீழ் 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன (Nihal Seneviratne) தெரிவித்துள்ளார்.

nihal seneviratne

திறந்த கணக்கு பரிவர்த்தனை என்பது பொருட்கள் அனுப்பப்பட்டு பணம் செலுத்தப்படுவதற்கு முன்னர் பொருட்களை விநியோகம் செய்யும் முறையாகும்.

முன்னதாக, திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது நடைமுறையில் இருந்தது.

இருப்பினும், மே 6 ஆம் திகதி முதல், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.