கனடாவில் சாலை விபத்தில் பலியான இலங்கையரின் தெரியவந்த அடையாளம்

0
427

இலங்கையில் பிறந்து கனடாவில் வளர்ந்த ஒருவர் சாலை விபத்தொன்றில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். நேற்று முன் தினம் மாலை Ottawa நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் சிக்கினார்.

இரவு 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த நபர் பொலிஸ் துறையில் பணி செய்பவர் என்பது தெரியவந்தது.

விஜய் என்று அழைக்கப்படும் Vijayarani Mathiyalaghan (28) என்னும் அந்த இளைஞர் இலங்கையில் பிறந்தவர். Ottawaவில் வளர்ந்த விஜய் குடும்பத்தின் கடைசி மகனாம்.

Ottawa பொலிஸ் துறையில் சேரும் முன் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியுள்ள விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் பொலிஸ் துறையில் இணைந்தாராம்.

விஜயை இழந்து அவரது குடும்பத்தார் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், Ottawa பொலிஸ் கூட்டமைப்பின் தலைவரான Brian Samuel தங்கள் பொலிஸ் குடும்பம் ஒரு சகோதரனை இழந்துவிட்டதாகவும் தங்கள் நண்பனுக்காக துக்கம் அனுஷ்டிப்பதாகவும், தன் பணியின் ஆரம்பகட்டத்திலேயே மரணித்துவிட்ட விஜய் உயிருடன் இருந்திருந்தால் அவர் சமுதாயத்துக்கும் பொலிஸ் துறைக்கும் என்னென்னவோ பங்களிப்புக்களைச் செய்திருப்பார் என்றும் கூறி தன் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.