1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி சிலை திறப்பு!

0
973

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைத்தார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் கருணாநிதி சிலையை கு வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கம்பீர சிலை எப்படி தயாரிக்கப்பட்டது.

சிலை குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்கள்

1. திறக்கப்பட்ட கருணாநிதியின் முழு உருவ சிலையை வடிவமைத்த சிற்பியின் பெயர் தீனதயாளன். தமிழ்நாட்டில் மட்டுமே 20 க்கும் அதிகமான கருணாநிதியின் சிலைகளை தீனதயாளன் வடிவமைத்து இருக்கிறாராம்.

2. கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட அவரது முழு உருவ சிலையை வடிவமைத்துக் கொடுத்தவர் சிற்பி தீனதயாளன் தானாம்.

3. ஓமந்தூரார் தோட்டத்தில் திறக்கப்படும் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறார்கள்.

4. 16 அடியில் அமைக்கப்படும் இந்த கருணாநிதி சிலை 3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளதாம்.

5. இந்த சிலை போல் ஏற்கனவே 3 டன் களிமண்ணை கொண்ட 16 அடி உயர மாதிரி சிலை வடிவமைக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்டதாம்.

6. முதலமைச்சரின் ஒப்புதலை பெற்ற பிறகு அந்த சிலையை மெழுகில் அச்சிட்டு உண்மையான கருணாநிதி சிலையை வடிவமைத்து இருக்கிறார் சிற்பி தீனதயாளன்.

7. கருணாநிதியின் இந்த புதிய சிலையே தமிழ்நாட்டில் உலோகத்தினால் அமைக்கப்படும் மிக உயரமான சிலை என கூறப்படுகிறது.

8. தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் செலவில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த கருணாநிதியின் சிலைக்கு ரூ.1.56 கோடி செலவிடப்பட்டு உள்ளார்களாம்.

9. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அருகே அண்ணாசாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலையும் அதற்கு அருகே அண்ணாசாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலையும் உள்ள நிலையில் இரண்டு திராவிட இயக்க தலைவர்கள் சிலைக்கு மத்தியில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.

10. இந்த சிலையை சாலைக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக இருந்ததாம். எனினும் , அதிக உயரம் கொண்ட இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு வரலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ஓமந்தூரார் வளாகத்தில் வைக்க முடிவு செய்தார்களாம்.

Vice President Unveils 16-Feet Tall Karunanidhi Bronze Statue In Tamil Nadu

Venkaiah Naidu unveils 16 ft tall Karunanidhi statue in TN | India News -  Times of India

ரூ.1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி கம்பீர சிலை! சிறப்பம்சங்கள் என்ன  தெரியுமா? | Salient Features of Former Chief Minister M Karunanidhi Statue  in Chennai - Tamil Oneindia

ரூ.1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி கம்பீர சிலை! சிறப்பம்சங்கள் என்ன  தெரியுமா? | Salient Features of Former Chief Minister M Karunanidhi Statue  in Chennai - Tamil Oneindia