ஒரே வருடத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை சம்பள உயர்வு… அசத்தும் ஆப்பிள்

0
169

முன்னணி மென்பொருள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் இரண்டாவது சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஊதிய உயர்வைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு அளித்தது. அதன்படி, மணிநேர ஊதியம் $ 20 இல் இருந்து $ 22 ஆக (ரூ. 1,700) அதிகரித்தது.

கடந்த வருடத்தில் 10% மேல் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சில ஊழியர்கள் தங்கள் பணி நிலைமைகள் குறித்து புகார் தெரிவித்ததை அடுத்து இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகையில்,

‘உலகின் சிறந்த ஊழியர்களை ஆதரித்து தக்கவைத்துக்கொள்வதன் மூலம், எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடியும். இந்த ஆண்டு, எங்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக எங்கள் ஒட்டுமொத்த பட்ஜெட்டை உயர்த்துகிறோம்.