இன்றைய ராசிபலன் (24, மே 2022)

0
932

மே 24 திங்கட்க்கிழமை, சந்திரன் மகர ராசியிலும் பிறகு மகர ராசியில் சஞ்சரிப்பார். சந்திரனின் இந்த சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு இன்று மிகவும் நன்மை பயக்கும். மிதுன ராசிக்காரர்களும் கிரகங்களின் சுப ஸ்தானத்தின் பலன்களைப் பெறுவார்கள். மற்ற எல்லா ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் 

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுடைய வளமும், வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அற்புத நாளாக இருக்கும்.

தொழிலில் பல்வேறு முன்னேற்றங்களை அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் முடிந்த வரை அதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனுகூல பலன்களைப் பெறலாம். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம்.

ரிஷபம் 

மனதில் எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேறும் என்றாலும் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். ஒன்றும் இல்லாத விஷயத்திற்குக் கூட வீண் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

பொதுவாக தொழில் வியாபாரத்தில் நீங்களே முன்னின்று செயல்பட்டால் தான் அனுகூல பலனைப் பெறக்கூடியதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயங்கள் கிடைக்கும்.

மிதுனம் 

உங்களுக்கு எளிதில் முடியக்கூடிய காரியங்களுக்கு கூட சற்று காலதாமதமாக வாய்ப்புள்ளது இருக்கும். வசதிகளை கூட அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்படலாம். இருப்பினும் எதையும் சமாளிக்கக்கூடிய திறன் உங்களுக்கு இருக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் வாளமாக பலனை அடையலாம்.

கடகம் 

நீங்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். எளிதில் முடியக் கூடிய காரியங்கள் கூட சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது இன்று. நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது அவசியம்.

தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது அதன் காரணமாக நீங்களே முன்னின்று செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். மற்றவர்களின் வேலையை கூட நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம்.

சிம்மம் 

உங்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக திருப்திகரமாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் உள்ளது. உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களே அடையக் கூடியதாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடினமான பணியை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

கன்னி 

உங்கள் வளமும் வலிமையும் அதிகமாக இருக்கும்.எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் தரக்கூடிய பலனைப் பெறலாம். வேலை ஆட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

வேலையில் கடந்த கால பிரச்னைகள் எல்லாம் விலகி சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அதனால் எதையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படலாம் அதன் மூலம் அதிர்ஷ்ட பலன் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த வேலைகள் சிறப்பாக நடக்கும்.

துலாம் 

புண்ணிய காரியங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதால் பெரிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

தொழில் ரீதியாக வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்கள் சக நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் நற்பலன் உண்டாகும்.

விருச்சிகம் 

உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியம். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாக இருப்பது நல்லது.

உங்களுக்கு தொழில்ரீதியாக வேலையாட்களின் ஒத்துழைப்பு அவ்வளவாக சிறப்பாக இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் மற்றவர்களின் வேலையைக் கூட நீங்கள் எடுத்து செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படலாம். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது தூரப் பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

தனுசு 

நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபகரமான பலன்களே அடையக்கூடிய இனிய நாளாக என்று இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய யோகமான நாள் இன்று.

வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களுக்கு இருந்த கடந்த கால பிரச்சினைகள் நீங்கி நிம்மதி ஏற்படும்.

மகரம் 

உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். இருக்குமிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கூட கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு இருந்த மறைமுகப் பிரச்சனைகள் கூட குறைய கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

அதுமட்டுமல்லாமல் தொழில்ரீதியாக மனப்பான்மை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு நெருக்கடிகள் குறையும். அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் மூலமாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம் 

தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் எதிலும் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும்.

இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படும். குறிப்பாக நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் வேலையாட்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நாளாக இருந்தாலும் எதிலும் கற்றுக் கவனத்துடன் இருப்பது அவசியம்.

மீனம் 

நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படலாம். அதனால் வீண் செலவும் ஏற்படலாம். எந்த ஒரு செயலையும் நீங்களே முன்னின்று செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும்.

சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகாரிகளுடன் கனிவாக பேசுவது அவசியம். பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்றாலும் உங்கள் திறமையால் எளிதில் சமாளிக்க கூடியதாக இருக்கும்.