இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. திலகரத்னவின் இடமாற்றத்திற்கான கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார்.