நீதியை வெல்ல பேரறிவாளன் கடந்து வந்த பாதை!

0
508

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பிணையில் அவரை விடுதலை செய்த இந்திய உச்ச நீதிமன்றம், இன்று அவரை முற்றாக விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

நீதியை வென்றெடுக்க பேரறிவாளன் கடந்து வந்த பாதை

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை:

1991 மே 21 : சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலை குண்டு தாக்குதலில் கொலை.

1991 ஜூன் 11: பேரறிவாளன் கைது 1998 ஜன 28 : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்.

1999 மே 11 : சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் இந்திய உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஏனைய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

1999 அக்டோபர் 8: மரண தண்டனையை மீளாய்வு  செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்.

1999 அக்டோபர் 17: தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனுவை அனுப்பி வைத்தார்.

999 அக்டோபர் 29 : தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நான்கு பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார் அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.

2000 ஏப்ரல் 25 : பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

2000 ஏப்ரல் 26: இந்திய ஜனாதிபதிக்கு பேரறிவாளன் கருணை மனுவை அனுப்பி வைத்தார்.

2011 ஓகஸ்ட் 26: பேரறிவாளனின் கருணை மனுவை அன்றைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

2016: கருணை மனுவை இந்திய ஜனாதிபதி  தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் பேரறிவாளன் வழக்கு பதிவு செய்த நிலையில் தன்னை விடுவிக்கக்கோரி 2016 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.

2022 மே 18 : உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

நீதியை வென்றெடுக்க பேரறிவாளன் கடந்து வந்த பாதை