பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்!

0
532

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை, புலம்பெயர் நாடுகளில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன. ‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் Tooting Donor Centre, Croydon Donor Centre ஆகிய இடங்களல் 30 ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கியிருந்தனர்.

ஆஸ்டன் ஹால் ஹோட்டல் ஆஸ்டன், ஷெஃபீல்ட் பகுதியிலும் குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது.

இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது. போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர். இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானிவின் பல பாகங்களில் தமிழர் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி எமது மக்கள் பட்ட துயரங்களை வேற்றின மக்களுக்கும், உலகநாடுகளுக்கும் உணர்த்த காட்சிப்படங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தில் துவண்டு போகும் நாளல்ல மாறாக எமது மக்கள் அடைந்த துயரத்தையும் உயிர்ப்பாய் உள்வாங்கி ஒருதேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுகந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை அமைப்பதே ஒரே வழி என உறுதிகொள்ளும் நாளாகும்

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக நிகழ்ந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல்! -  கனடாமிரர்

British Tamils remember Mullivaikal massacre in London and Glasgow | Tamil  Guardian

பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  (படங்கள்) - ஐபிசி தமிழ்

பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  (படங்கள்) - ஐபிசி தமிழ்