அமரகீர்த்திக்குப் பதிலாக ஜகத் சமரவிக்ரம நியமனம்!

0
186
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் திடீர் மரணத்தினால் வெற்றிடமான பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரமவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொலன்னறுவை – 18ஆம் இலக்க தேர்தல் மாவட்டத்தின் ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜகத் சமரவிக்ரம தெரிவு செய்யப்பட்டதாக அரசாங்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.