மீண்டும் மாலை 6 மணிக்கே ஊரடங்கு நடைமுறை!

0
236

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படும்.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிகளின்படி திங்கட்கிழமை (9) முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஊரடங்குச் சட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, பொது சாலைகள், ரயில் பாதைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது பொது இடங்களில் யாரும் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.